WC 2007 சூப்பர் எட்டு ஆட்டங்கள் - ஓர் அலசல்
எதிர்பார்த்தது போலவே, சில ஆட்டங்கள் விறுவிறுப்பாகவும், சில ஆட்டங்கள் ஒரு தலை பட்சமாகவும் அமைந்தன. இவற்றில் சிறந்த ஆட்டங்கள் என்று சொல்லக்கூடியவை, இங்கிலாந்து vs இலங்கை ஆட்டமும், பங்களாதேஷ் vs தென்னாபிரிக்கா ஆட்டமும்!
1. England vs Ireland
இவ்வாட்டம் ஓரளவு ரசிக்கத்தக்கதாய் அமைந்தது. முதல் சுற்றில் பாகிஸ்தானை அயர்லாந்து அணி வீழ்த்தியிருந்ததால், ஒரு வித எதிர்பார்ப்பு இருந்தது உண்மையே. முதலில் பேட் செய்த இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 113-4 என்று தடுமாறியபோது, அயர்லாந்து வீரர்கள் உற்சாகமாய் காணப்பட்டனர்! எப்போதும் போல், காலிங்வுட் (90 ரன்கள்), தனது இன்னிங்க்ஸை அருமையாக pace செய்து, பிளின்டா·புடன் ஜோடி சேர்ந்து கலக்கியதில், இங்கிலாந்து ஒரு வழியாக 266 ரன்கள் என்ற challenging இலக்கை எட்டியது.
Neil O'Brien-ஐ மட்டுமே நம்பியிருந்த அயர்லாந்து அணி, 218 ரன்களில் சுருண்டது. அவர் 63 ரன்கள் எடுத்தார். 250-க்கு மேலான ஓர் இலக்கை துரத்தும்போது, ரன் ரேட் 7-7.5 ர்னகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்ற பால பாடத்தை அயர்லாந்து அன்று பெற்றது :)
2. Australia vs Bangladesh
இந்தியாவை வீழ்த்திய பங்களாதேஷ் இத்தனை மோசமாக தோற்கும் என்று நினைக்கவில்லை. மழையும் சதி செய்தது. 22 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில், பங்களா நிர்ணயித்த வெற்றி இலக்கான 105 ரன்களை ஆஸ்திரேலியா மிக எளிதாக 14-வது ஓவரிலேயே, விக்கெட் இழப்பின்றி எட்டி, வெற்றி பெற்றது. கிளென் மெக்ரா 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்ட நாயகன் ஆனார்.
3. Srilanka vs West Indies
இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக, வெஸ்ட் இண்டீஸ¤க்கு நேரம் சரியில்லை போல தெரிகிறது. ஏற்கனவே, சூப்பர் எட்டு ஆரம்பத்தில், ஆஸ்திரேலியா மற்றும் NZ அணிகளிம் மண்ணைக் கவ்விய வெஸ்ட் இண்டீஸ், தனது மூன்றாவது தொடர் தோல்வியை சந்தித்தது! முதலில் ஆடிய இலங்கை, ஜெயசூரியாவின் திரித சதத்தின் (115) மற்றும் கேப்டன் ஜெயவர்த்தனேயின் 82 ரன்களின் வலிமையில் 303 ரன்கள் குவித்தது! தில்ஷன் ஒரு Cameo இன்னிங்க்ஸ் ஆடி 39 ரன்கள் எடுத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கதே.
கேய்ல் (Gayle) அல்லது லாரா சிறப்பாக விளையாடாத எந்த ஓர் ஆட்டத்திலும், வெஸ்ட் இண்டீஸ் தடுமாறும் என்பதை அனைவரும் அறிவர். அது போலவே, அவர்கள் இருவரும் ஏமாற்றியதால், ஆட்டம் களை கட்டவில்லை. 42-3 என்ற நிலையிலிருந்து 134 ரன்கள் வரை, சர்வானும் சந்திரபாலும் ஜோடி சேர்ந்து விளையாடியபோதும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை குறைவாகவே இருந்தது. முரளியை அவர்கள் சிறப்பாக எதிர் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில், 190 ரன்களில் சுருண்டு, வெஸ்ட் இண்டீஸ் பெரும் தோல்வியைத் தழுவியது. வெஸ்ட் இண்டீஸ் அடுத்த சுற்றுக்குச் செல்லாது என்பது என் கணிப்பு. ஜெயசூர்யா (இவர் 3 விக்கெட்டுகளையும் அன்று வீழ்த்தினார்!) ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
4. Newzealand vs Bangladesh
பங்களாதேஷ் 10 ஆட்டங்கள் ஆடினால், ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக நான் எழுதியதை ஊர்ஜிதம் செய்யும் வகையில், பங்களா மிக மோசமாக ஆடி, 174 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியது. NZ 29.2 ஓவர்களில், வெற்றி இலக்கை சுலபமாக எட்டி வென்றது! ஆட்டத்தில் சிறப்பம்சம், NZ கேப்டன் ·பிளெமிங் அடித்த அருமையான சதம், அவரே ஆட்ட நாயகனும் கூட!
5. South Africa vs Ireland
இவ்வாட்டத்தில், குறிப்பிட்டு எழுத எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை. மழையின் காரணமாக ஆட்டம் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தென்னாபிரிக்காவுக்கு சுலபமான வெற்றி! 66 ரன்கள் எடுத்த ஜேக் காலிஸ் ·பார்முக்கு வருவதற்கான அறிகுறி தெரிந்தது. எதிரணிகள் உஷார்!!!
6. Srilanka vs England
சூப்பர் எட்டு சுற்றின் மகத்தான ஆட்டமிது! நிறைய திடுக் திடுக் கணங்களும், திருப்பங்களும் நிறைந்திருந்தது! முதலில் பேட் செய்த இலங்கை அணயின் இன்னிங்க்ஸில், தரங்கா-ஜெயவர்த்தனே பார்ட்னர்ஷிப் தவிர்த்து, குறிப்பிடும்படியாக சொல்ல எதுவுமில்லை. ·பிளின்டா·பும் (3-35) மஹமுதும் (4-50) சிறப்பாக பந்து வீசினர். இலங்கை 235 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து, 11 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தாலும், பீட்டர்ஸன்-பெல் பார்ட்னர்ஷிப் (90 ரன்கள்) வாயிலாக மீண்டு வந்த சமயத்தில், 4 முக்கிய விக்கெட்டுகளை (பெல், பீட்டர்ஸன், ·பிளின்டா·ப், காலிங்வுட்) அடுத்த 32 ரன்களில் பறிகொடுத்து, தோல்விக்குத் தன்னை ஆயத்தப்படுத்தி கொண்டது, ஸ்கோர் 133-6 ! பீட்டர்ஸன் மறுபடியும் முரளியின் Bunny ஆனார், இங்கிலாந்தின் ஆபத்பாந்தவனான காலிங்வுட் , பெர்னாண்டோ பந்தில் LBW !
அதன் பின் நடந்தது ஒரு சூப்பர் FIGHTBACK! 21 வயதான (இந்திய வம்சாவழியில் வந்த) பொப்பராவும், பந்து காப்பாளார் நிக்ஸனும் ஜோடி சேர்ந்து கவனமாக ஆடி, இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களை அழகாக எதிர்கொண்டு, ஸ்கோரை 220 வரை எடுத்து வந்தனர். முரளி போட்ட பந்தை நிக்ஸன் reverse sweep செய்து ஆறு அடித்தது அற்புதம்! ரன் ரேட் கிட்டத்தட்ட 10 வரை ஏறியபோதும், இருவரும் கலங்காமல் ஆடினர். நம் இந்திய அணி இவர்கள் இருவரிடமும் கற்க வேண்டியது நிறைய உள்ளது ;-)
7 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், நிக்ஸன் ஆட்டமிழந்தார். ஆனாலும், இளம் பொப்பரா நம்பிக்கை இழக்காமல், ஒரு பவுண்டரி அடிக்க, இறுதி ஓவரில் 12 ரன்கள் இங்கிலாந்து எடுத்தால் வெற்றி என்ற நிலைமை! முதல் நான்கு பந்துகளில், பொப்பரா 8 ரன்கள் எடுத்தார், ஒரு பவுண்டரி சேர்த்து! இப்போது, இரண்டு பந்துகளில் 4 ரன்கள் தேவை, மஹமுது ஒரு ரன் எடுக்க, கடைசி பந்தில் இங்கிலாந்தை கரை சேர்க்க, பொப்பரா எடுக்க வேண்டியது மூன்று ரன்கள் என்றிருந்தபோது, பொப்பரா பெர்னாண்டோவின் பந்தில் Clean Bowled ஆனது துரதிருஷ்டமே!!!
இலங்கை இரண்டு ரன்களில் வெற்றி பெற்றது. Real Pulsating Finish! இந்தியா பங்கு பெறாத ஆட்டம் என்றபோதும், எனக்கே சற்று டென்ஷனாகி விட்டது :) இந்தியாவை வெளியேற்றிய இலங்கை தோற்க வேண்டும் என்ற என் ஆசையும் நிராசையாகி, தூக்கமும் கெட்டது தான் மிச்சம் :) மேட்ச் முடியும்போது, மணி காலை 3.15 !!!
7. Bangladesh vs South Africa
இதுவும் ஒரு பிரமாதமான ஆட்டம்! Providence ஸ்டேடியத்தில், providence அன்று பங்களாதேஷ் பக்கம் இருந்தது :)
ஸ்மித் டாஸில் வென்று, நல்ல பேட்டிங் பிட்ச் என்று அனுமானித்து, பங்களாவை பேட் செய்ய அழைத்தார். அதற்குக் காரணம், தென்னாபிரிக்காவின் அப்போதிருந்த negative நெட் ரன் ரேட் ! பங்களாவை குறைந்த ரன்களில் சுருட்டி விட்டு, இலக்கை குறைந்த ஓவர்களில் எட்டி, NRR-ஐ அதிகப்படுத்த வேண்டும் என்ற ஸ்மித்தின் நினைப்பில் மண் விழுந்தது!
பங்களா 251 ரன்கள் எடுத்து, NRR-ஐ கூட்டுவது என்ன, வெல்வதே கடினம் என்ற நிலைக்கு தென்னாபிரிக்காவைத் தள்ளியது :) முந்தைய 2 மேட்ச்களில் படுதோல்வியை சந்தித்த பங்களா அன்று வெற்றி வெறியுடனும், உத்வேகத்துடனும் விளையாடியது.
முதல் 25 ஓவர்களில் சற்றுத் தடுமாறி 92-4 என்ற நிலையில் இருந்த பங்களா, அஷ்ரா·புலின் 87 ரன்களின் (83 பந்துகள்) பலத்திலும், அ·ப்டாப் மற்றும் மொர்டாஸாவின் அதிரடி ஆட்டத்தின் பயனாலும், அடுத்த 25 ஓவர்களில் 159 ரன்களை குவித்தது. கடைசி பத்து ஓவர்களில் மட்டும் 80 ரன்கள். நெல், போலாக் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் துவைக்கப்பட்டனர் !
தென்னாபிரிக்கா 48.4 ஓவர்களில், 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, பங்களாதேஷ¤க்கு மற்றுமொரு முறை Giant killer பட்டம் வழங்க வழி செய்தது :) தென்னாபிரிக்கா செமி ·பைனலுக்கு தகுதி பெறுமா என்ற சந்தேகம் வந்து விட்டது எனக்கு :( இந்த ஆட்டம் குறித்து விரிவாக பின்னர் எழுத உத்தேசம்.
இந்த ஆட்டம் குறித்து விரிவாக இங்கே எழுதியிருக்கிறேன் !
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 327 ***
9 மறுமொழிகள்:
Test comment !
நல்ல அலசல், பாலா!
Srilanka vs South Africa match யை விட்டுடீங்க?
நல்ல தொகுப்பு.
நியுஸி-பங்களாதேஷ் ஆட்டத்தின் ஆட்ட நாயகன் ஷேன் பாண்ட்.
இலங்கை - இங்கிலாந்து ஆட்டம் சிறப்பான ஒருநாள் ஆட்டமாக இருந்தது.
அதுவும் ஐந்தாவது ஒருநாள் ஆட்டத்தில் விளையாடிய போப்ராவின் அணுகுமுறை அசத்தலாக இருந்தது. பொறுமையாக அதே நேரம் எல்லா பந்துகளையும் எதிர்கொள்ளத்தக்க மனவலிமையையும் சேர்த்து கொண்டு வந்தது, தேவையான நேரத்தில் துரிதமாக ரன் சேர்த்தது என அழகாக பாடம் நடத்தினார். உங்களை போலவே திலகராவின் கடைசி பதை பவுண்டரிக்கு விரட்டுவார் என்றே எதிர்பார்த்தேன். மட்டையில் படவில்லை. பட்டிருந்தால் அது நான்குதான். கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் அடித்த பவுண்ட அன்றைய ஆட்டத்தலியே சிறப்பான ஒரு ஷாட்
Dear Mr.Bala
"""அயர்லாந்து பாக் அணியை வீழ்த்தியதும், பங்களாதேஷ் இந்தியாவை வீழ்த்தியதும் என்னளவில், Aberrations மட்டுமே ! """
""""பங்களாதேஷ் அணி, இந்தியாவில் உள்ள ஒரு நல்ல ரஞ்சி அணியுடன் (மும்பை, மேற்கு வங்கம் ... ) ஒப்பிடத்தக்கது, அவ்வளவே!""""
இதை சொன்ன நீங்களே இப்போது பின்வருமாறு சொல்லி ஸ்மைலியெல்லாம் போட்டாலும் ஒத்துக் கொள்ள முடியாது.
"""தென்னாபிரிக்கா 48.4 ஓவர்களில், 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, பங்களாதேஷ¤க்கு மற்றுமொரு முறை Giant killer பட்டம் வழங்க வழி செய்தது :) """"
Clearly you have erred in your judgement.Accept it.Bangladesh is playing better cricket that you are assuming or projecting.
Good analysis ...
//தென்றல் said...
நல்ல அலசல், பாலா!
Srilanka vs South Africa match யை விட்டுடீங்க?
//
அது குறித்து தனிப்பதிவாக எழுதுகிறேன். தென்றலான வரவுக்கு நன்றி :)
//முத்துகுமரன் said...
இலங்கை - இங்கிலாந்து ஆட்டம் சிறப்பான ஒருநாள் ஆட்டமாக இருந்தது.
அதுவும் ஐந்தாவது ஒருநாள் ஆட்டத்தில் விளையாடிய போப்ராவின் அணுகுமுறை
அசத்தலாக இருந்தது. பொறுமையாக அதே நேரம் எல்லா பந்துகளையும்
எதிர்கொள்ளத்தக்க மனவலிமையையும் சேர்த்து கொண்டு வந்தது, தேவையான
நேரத்தில் துரிதமாக ரன் சேர்த்தது என அழகாக பாடம் நடத்தினார்.
//
நன்றி, முத்துகுமரன், போப்பராவின் ஆட்டம் அன்று அற்புதம், அந்த ஆட்டத்திற்கு
இங்கிலாந்து ஜெயித்திருக்க வேண்டும் !
//Anonymous said...
இதை சொன்ன நீங்களே இப்போது பின்வருமாறு சொல்லி ஸ்மைலியெல்லாம்
போட்டாலும் ஒத்துக் கொள்ள முடியாது.
"""தென்னாபிரிக்கா 48.4 ஓவர்களில், 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி,
பங்களாதேஷதக்கு மற்றுமொரு முறை Giant killer பட்டம் வழங்க வழி செய்தது :)
""""
Clearly you have erred in your judgement.Accept it.Bangladesh is
playing better cricket that you are assuming or projecting.
//
அனானி, வாங்க! ஸ்மைலியை ஒத்துக் கொள்ளவிட்டால் எப்படி :))))
இன்னும் ஒரு மேட்ச் சூப்பர் எட்டில் பங்களா வென்றால், I will definitely accept 100% that I had erred (clearly) in my judgement and forecast.
தவறை ஒப்புக் கொள்ளும் குணம் என்னிடம் உள்ளதாகவே நம்புகிறேன், நீங்க சொல்லுங்க :)
****************************
""""இன்னும் ஒரு மேட்ச் சூப்பர் எட்டில் பங்களா வென்றால், I will definitely accept 100% that I had erred (clearly) in my judgement and forecast.""""
கண்டிப்பாக அயர்லாந்தை வென்றுவிடும். ஸோ தப்பு தப்புதான்.
ஸ்மைலி நானும் போடுவேனே :)
//
கண்டிப்பாக அயர்லாந்தை வென்றுவிடும். ஸோ தப்பு தப்புதான்.
ஸ்மைலி நானும் போடுவேனே :)
//
BIG ஸ்மைலி நானும் போடுவேனே :))))))))))))))
Post a Comment